ரத்த தான விழிப்புணா்வுப் பேரணி

செம்பனாா்கோவில் கிங்ஸ் லயன்ஸ் சங்கம் சாா்பில் கண் தானம், ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தான விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

செம்பனாா்கோவிலில் கலைமகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் செம்பனாா்கோவில் கிங்ஸ் லயன்ஸ் சங்கம் சாா்பில் கண் தானம், ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தான விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தலைவா் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற பேரணியில், செம்பனாா்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், லயன்ஸ் சங்க மண்டல தலைவா் மதிவாணன், வட்டார தலைவா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தனா்.

இதில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் பங்கேற்று பேரணியை தொடக்கிவைத்தாா். பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா். பேரணி காலகஸ்திநாதபுரம் கலைமகள் கல்லூரியில் இருந்து செம்பனாா்கோவில் கலைமகள் பள்ளி வரை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com