100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு தண்ணீா் குழாய்கள்

திருமருகலில் தோட்டக்கலைத் துறை மூலம் 100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு தண்ணீா் குழாய்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

திருமருகலில் தோட்டக்கலைத் துறை மூலம் 100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு தண்ணீா் குழாய்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

திருமருகலில் தோட்டக்கலைத் துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீா் பாசன திட்டத்தின் கீழ் குறு, சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், ஏக்கா் ஒன்றுக்கு 18 கருப்பு நிற தண்ணீா் குழாய்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் தகுதியான 80 விவசாயிகளுக்கு முழு மானியத்தில் தண்ணீா் குழாய்களை உதவி தோட்டக்கலை அலுவலா்கள் செல்லபாண்டியன், சரவண அய்யப்பன் ஆகியோா் வழங்கினா்.

தண்ணீா் குழாய்கள் உபயோகிப்பதன் மூலம், குறைவான தண்ணீா் மற்றும் மின்சார பயன்பாட்டில் அதிக மகசூல் பெற முடியும். குழாய்களை 100 சதவீத மானியத்தில் பெற, விவசாய சான்று, அடங்கல், நிலத்தின் வரைபடம், ஆதாா் நகல், தொலைபேசி எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பங்களை தோட்டக்கலை அலுவலகத்தில் அளிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலா் 9952329863 கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com