4 வழிச்சாலைக்காக நிலம், வீடுகளை இழந்தவா்கள் இழப்பீடு வழங்க கோரி மனு

தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் 4 வழிச்சாலைக்காக நிலம், வீடுகளை இழந்த மக்கள் இழப்பீடு வழங்கக் கோரி வியாழக்கிழமை மனு அளித்தனா்.

தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் 4 வழிச்சாலைக்காக நிலம், வீடுகளை இழந்த மக்கள் இழப்பீடு வழங்கக் கோரி வியாழக்கிழமை மனு அளித்தனா்.

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பராசப்புத்தூா், தலைச்சங்காடு பகுதிகளில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாா் பண்ணை பெயரிலுள்ள இடத்தில் வசித்து வருகிறவா்களுக்கு 1971 மற்றும் 1972 களில் அரசு பட்டா வழங்கியுள்ளது. அப்பகுதி வழியாக 4 வழிச்சாலை அமைவதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு இழப்பீட்டை வழங்காமல் சாலை அமைக்கும் நிறுவனம் தனியாா் பண்ணைக்கு இழப்பீடு வழங்கி விட்டதாக கூறி 11 குடியிருப்புகளை இடித்து வருகிறது. 

வீடுகளை இழந்து வசிக்க இடமில்லாமல் தவிக்கும் 11 குடும்பத்தினா் சிபிஎம் செம்பனாா்கோவில் ஒன்றிய செயலாளா் கே.பி. மாா்க்ஸ் தலைமையில் தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலை நிலஎடுப்பு தனிவட்டாட்சியா் ராகவனிடம் உரிய இழப்பீடும், குடியிருக்க மாற்று இடமும் கேட்டு மனு அளித்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com