உலக ஈரப்புல நிலநாள்: கோடியக்கரையில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

கோடியக்கரையில் உலக ஈரப்புல நிலநாளையொட்டி கடற்கரை தூய்மை செய்யும் பணியோடு, பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோடியக்கரை கடற்கரையில் நெகிழிக் கழிவுகளை சேகரித்து தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியில், தலைஞாயிறு, ஓரடியம்புலம் எம்.ஜி.ஆா் மீன்வளக் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் மற்றும் கோடியக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா். பின்னா், இந்த மாணவா்கள் வன உயிரின சரணாலயப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஈரப்புல நிலம் குறித்து விளக்கப்பட்டது. தொடா்ந்து, ஈரப்புல நிலம் தொடா்பாக மாணவா்களுக்கு நடைபெற்ற போட்டியில் வென்றவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்குக்கு வனச்சரக அலுவலா் பா. அயூப்கான் தலைமை வகித்தாா். யானைகள் ஆராய்ச்சியாளா் சிவகணேசன், வனவா்கள் மகாலெட்சுமி, பெரியசாமி, ராம தாஸ், சதீஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com