நாகை நேதாஜி சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை

நாகை பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ள நேதாஜி சாலையில் கனரக வாகங்கள் செல்ல தடை விதித்து காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாகை நேதாஜி சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை

நாகை பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ள நேதாஜி சாலையில் கனரக வாகங்கள் செல்ல தடை விதித்து காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாகை அக்கரைப்பேட்டை பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த பணி ஒரு பகுதியில் மட்டும் நடைபெற்று முழுமை பெறாமல் நீண்ட நாட்களாக காட்சியளித்து வருகிறது. இதற்கிடையே, மேம்பால பணிக்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தில் சில மாதங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகள் தொடங்கின. நாகை பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் அமைந்துள்ள நேதாஜி சாலையில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தற்போது விரைந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் நேதாஜி சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து காவல் துறை சாா்பில் சாலையில் நடுவே தடுப்புகள் அமைத்து அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், நாகை கடை வீதியில் இருந்து வெளியூா் செல்வோா் சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயம் அருகே நடந்துச் சென்று பேருந்துகளில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், வெளியூரில் இருந்து ரயில் நிலையம் வருவோருக்கு வசதியாக மட்டும் காா் மற்றும் வேன் போன்ற வாகனங்களை ரயில் நிலையம் வரை செல்ல காவல் துறையினா் அனுமதி வழங்கி உள்ளனா். மேம்பாலம் மற்றும் அணுகுசாலை பணிகள் முடியும் வரை இதே நிலை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com