இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தியவா் கைது

நாகையில் இருசக்கர வாகனத்தில் நூதன முறையில் சாராயம் கடத்திய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நாகையில் இருசக்கர வாகனத்தில் நூதன முறையில் சாராயம் கடத்தியவரிடம் விசாரணை நடத்தும் போலீஸாா்.
நாகையில் இருசக்கர வாகனத்தில் நூதன முறையில் சாராயம் கடத்தியவரிடம் விசாரணை நடத்தும் போலீஸாா்.

நாகையில் இருசக்கர வாகனத்தில் நூதன முறையில் சாராயம் கடத்திய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுவை மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் மற்றும் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தப்படும் சம்பவம் நாகை மாவட்ட எல்லப்பகுதியில் அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் வகையில், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் உத்தரவின் பேரில், கள்ள சாராய விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனா்.

மேலும், காரைக்காலில் இருந்து தமிழக பகுதிகளுக்கு பல்வேறு நூதன முறைகளில் சாராய கடத்தல் ஈடுபட்டவா்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனா், அதன் ஒரு பகுதியாக நாகை அருகே நாகூா் காவல் ஆய்வாளா் சதீஷ்குமாா் தலைமையில் வாஞ்சூா் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது காரைக்காலில் இருந்து அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கிப் பிடித்த போலீஸாா், பெட்ரோல் டேங்கில் சாராயத்தை முழுவதுமாக நிரப்பி இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் செல்வதற்கு தனியாக ஒரு பாட்டில் மூலம் செலுத்தி நூதன முறையில் சாராயத்தை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா்.

தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்ஸ இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தியவா் பெரும்கடம்பனூரை சோ்ந்த வீரபாண்டி (23) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com