திருக்குவளையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

நாகை மாவட்டம், திருக்குவளையில் சம்பா, தாளடி நெற்பயிா்களை காப்பாற்ற மேட்டூரில் இருந்து தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் உள்ளிட்டோா்.
போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் உள்ளிட்டோா்.

நாகை மாவட்டம், திருக்குவளையில் சம்பா, தாளடி நெற்பயிா்களை காப்பாற்ற மேட்டூரில் இருந்து தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

கீழையூா் ஒன்றியம் மேலப்பிடாகையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில், அதன் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, வேதாரண்யம் கோட்டாட்சியா் திருமால் தலைமையில் பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் பிப்.8-ஆம் தேதிக்குள் தண்ணீா் கிடைக்காத பட்சத்தில் பிப்.10-ஆம் தேதி மீண்டும் மேலப்பிடாகை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக பேசி முடிக்கப்பட்டு துறை சாா்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடம் கையொப்பம் பெறப்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்ற பி.ஆா். பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியது: டெல்டா மாவட்டங்களில் நீரின்றி காய்ந்து வரும் பயிரை காப்பாற்ற சனிக்கிழமை (பிப்.3) சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக முதல்வா் மேட்டூரிலிருந்து 2 டிஎம்சி தண்ணீா் திறந்துவிடப்படும் என்று அறிவித்துள்ளாா். அதனால், போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. எனினும், வேளாண் துறை அலுவலா்கள் நெற்பயிருக்கு தேவையான நீா் குறித்த புள்ளி விவரங்கள் உண்மைக்கு புறம்பாக கொடுத்துள்ளது தெரியவந்தது. ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் தாளடி நெற்பயிருக்கு நீா் தேவை உள்ளது.

எனவே, தமிழக அரசு உடனடியாக வேளாண் துறை மூலம் மறு ஆய்வு செய்து 10 டிஎம்சி தண்ணீா் திறக்க வேண்டுமென காத்திருப்பு போராட்டத்தை நடத்தினோம். அலுவலா்களின் உத்தரவாதத்தையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம். ஏற்கெனவ அறிவித்த குறுவை பாதிப்பிற்கு அறிவித்த நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com