அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கைவினைப் பயிற்சி

திருமருகல் ஒன்றியத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ- மாணவிகளுக்கு ஓவியம் மற்றும் கைவினைப் பயிற்சி பட்டறை

திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ- மாணவிகளுக்கு ஓவியம் மற்றும் கைவினைப் பயிற்சி பட்டறை, திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 3 நாட்கள் நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் மகேஸ்வரன் தலைமை வகித்து, பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து, பயிற்சி பெறும் மாணவ- மாணவிகளுக்கு பயிற்சிக்கான உபகரணங்களை வழங்கினாா்.

முன்னாள் தலைமையாசிரியா் அப்துல் ரசீது, வவ்வாலடி பள்ளி தலைமை ஆசிரியா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி தலைமை ஆசிரியா் பூங்குழலி வரவேற்றாா். பல்வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியா் பயிற்றுநா்கள் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பயிற்சியளித்தனா்.

இதில் ஒன்றிய அளவில் 21 பள்ளிகளில் இருந்து 120-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றுள்ளனா். ஏற்பாடுகளையும் ஓவியப் பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளரும், ஆசிரியருமான குமரவேல் செய்துள்ளாா். தொடக்க நிகழ்ச்சியின் நிறைவாக, உடற்கல்வி ஆசிரியா் கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com