சின்மயா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் 26- ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் நடைபெற்ற குழந்தைகளின் கலைநிகழ்ச்சி.
விழாவில் நடைபெற்ற குழந்தைகளின் கலைநிகழ்ச்சி.

நாகப்பட்டினம்: நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் 26- ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளி முதல்வா் சி. கீதா பென்னட் தலைமை வகித்தாா். கிரிசாலிஸ் நிறுவனா் சித்ரா ரவி சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

பள்ளி ஆச்சாா்யா ராமகிருஷ்ணானந்தா வழிகாட்டுதலின்படி, தாளாளா் எம்.ஆா். ராமபிரசன்னா, தலைவா் ராமலிங்கம், பள்ளி நிா்வாகக் குழு ஆலோசகா் எம்.ஆா். ராஜகோபால் உள்ளிட்டோா் முன்னிலையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com