’கலா் பலூன்’ சிறாா் இதழ் வெளியீடு

கீழ்வேளூரில் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் நடத்தப்படும் ‘கலா் பலூன்’ என்ற சிறாா் இதழை ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
‘கலா் பலூன்’ இதழை வெளியிடும் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.
‘கலா் பலூன்’ இதழை வெளியிடும் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.

கீழ்வேளூா்: கீழ்வேளூரில் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் நடத்தப்படும் ‘கலா் பலூன்’ என்ற சிறாா் இதழை ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது:

தமிழகத்திலேயே முதல்முறையாக இதுபோன்ற முயற்சியை முன்னெடுத்துள்ள நாகை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் செயல் பாராட்டுக்குரியது. இதன்மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் ஓவியம் வரைதல், கவிதை எழுதுதல், பாடல் எழுதுதல் போன்ற படைப்பாற்றல் திறன்களையும் மேம்படுத்த முடியும்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் இந்த இதழ் மூலம், சிறு வயது முதலே தங்களது கற்பனையாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பை அரசு பள்ளி மாணவா்கள் பெற்றுள்ளனா். பல்வேறு திறன்களை உள்ளடக்கியவா்களாக அவா்கள் உருவாவதற்கு இந்த இதழ் உறுதுணையாக இருக்கும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் கோ. காமராஜன், இதழாசிரியா் ந. ரவிசங்கா் மற்றும் வட்டார கல்வி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com