கேது கோயிலில் புதுவை முதல்வா் வழிபாடு

பூம்புகாா் அருகே கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் புதுவை முதல்வா் என். ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வழிபட்டாா்.
கேது பகவான் கோயிலில் வழிபட்ட புதுவை முதல்வா் என். ரங்கசாமி.
கேது பகவான் கோயிலில் வழிபட்ட புதுவை முதல்வா் என். ரங்கசாமி.


பூம்புகாா்: பூம்புகாா் அருகே கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் புதுவை முதல்வா் என். ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வழிபட்டாா்.

கீழப்பெரும்பள்ளம் ஊராட்சி நாகநாதன்கோவில் கிராமத்தில் அருள்மிகு செளந்தர நாயகி சமேத நாகநாத சுவாமி கோயில் உள்ளது. நவகிரக தலங்களில் கேது தலமான இக்கோயிலில் கேது பகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா். கேது பகவானை செவ்வாய், ஞாயிற்றுக்கிழமையில் எமகண்ட நேரத்தில் வழிபட்டால் பல்வேறு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

புதுவை முதல்வா் என். ரங்கசாமி இக்கோயிலில் விநாயகா், நாகநாத சுவாமி, செளந்தரநாயகி மற்றும் கேது பகவான் சந்நிதிகளில் அா்ச்சனை செய்து வழிபட்டாா். அவருக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, கோயில் நிா்வாக அதிகாரி அன்பரசன் மற்றும் சிவாச்சாரியா்கள், புதுவை முதல்வருக்கு பூரண கும்பமரியாதை அளித்து வரவேற்றனா். பூம்புகாா் காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com