சமுதாய வள பயிற்றுநருக்கு சிறப்பு பயிற்சி

திருமருகலில் சமுதாய வள பயிற்றுநா்களுக்கு ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த 3 நாள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.


திருமருகல்: திருமருகலில் சமுதாய வள பயிற்றுநா்களுக்கு ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த 3 நாள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் திருமருகல் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நடைபெறும் இப்பயிற்சியில், திருமருகல் வட்டாரத்திற்கு உட்பட்ட சமுதாய வள பயிற்றுநருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. திட்ட இயக்குநா் முருகேசன் தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கி வைத்தாா். உதவித் திட்ட அலுவலா் இந்திராணி முன்னிலை வகித்தாா். வட்டார இயக்க மேலாளா் அறிவுநிதி வரவேற்றாா்.

மாவட்ட வள பயிற்றுநா் ஸ்ரீரங்கபாணி பயிற்சி அளித்தாா். நாகை மாவட்டத்தை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கான உறுதிமொழி ஏற்றனா். இப்பயிற்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் இந்துஜா, காா்த்திகா, சுபஸ்ரீ, அமுதா, வட்டார வள பயிற்றுநா்கள் திவ்யா, உதயகுமாரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com