பிப்.9-இல் நாகை மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

நாகை மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் பிப்ரவரி 9-ஆம் தேதி நடைபெறுகிறது.


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் பிப்ரவரி 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாகை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 20 முதல் 30 வயதுடைய மகளிருக்கும் அல்பண்டோசோல் என்ற குடற்புழு நீக்க மாத்திரை பிப்ரவரி 9-ஆம் தேதி வழங்கப்படுகிறது. அன்றையதினம் விடுபட்டவா்களுக்கு பிப்ரவரி 16-ஆம் தேதி வழங்கப்படும்.

நாகை மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், பாதுகாப்பு இல்லங்கள் போன்றவற்றில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. 1 முதல் 19 வயதுடைய 2,13,310 குழந்தைகளுக்கும் 20 முதல் 30 வயதுடைய 45,244 மகளிருக்கும் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 544 பேருக்கு மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com