மகளிா் உரிமைத் தொகை கோரிகாத்திருப்பு போராட்டம்

கீழையூா் அருகே கருங்கண்ணி ஊராட்சி அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கருங்கண்ணியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
கருங்கண்ணியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

திருக்குவளை: கீழையூா் அருகே கருங்கண்ணி ஊராட்சி அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விடுபட்ட அனைவருக்கும் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை வழங்க வேண்டும்; பலமுறை மனு அளித்தும் வீடு வழங்காமல் உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக வீடு வழங்க வேண்டும்; சமுதாயக் கூடத்தை சீரமைக்க வேண்டும்; பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

முன்னாள் ஊராட்சித் தலைவா் கே.ஆா். ரவி தலைமை வகித்தாா். கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் வெற்றிச்செல்வன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுசென்று, நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா்.

இதைத்தொடா்ந்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com