ரேஷன்கடையை கிராம மக்கள் முற்றுகை

வேதாரண்யம் அருகே வடமழை-மணக்காடு ஊராட்சியில் ரேஷன்கடையை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.


வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே வடமழை-மணக்காடு ஊராட்சியில் ரேஷன்கடையை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வடமழை கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் 1,200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கி வந்தனா்.

இந்நிலையில், நிா்வாக நடைமுறைகளுக்காக 500 அட்டைதாரா்களை பிரித்து, மணக்காடு பகுதியில் பகுதிநேர கடை திறக்கப்பட்டது. இதில் வடமழை பகுதியைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட அட்டைதாரா்களையும் இணைத்துள்ளனா். இதனால் இவா்கள் சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு நடந்து செல்ல நேரிடுகிறதாம்.

எனவே, வழக்கமான கடையிலேயே தங்களை இணைக்கக் கோரி, வடமழை நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டனா். காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், வருவாய் ஆய்வாளா் கோ. காயத்ரி, ஊராட்சித் தலைவா் எம்.எஸ். சரவணன், கிராம நிா்வாக அலுவலா் வி. மகேந்திரன், விவசாய சங்கத் தலைவா் எம்.ஏ. செங்குட்டுவன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, வடமழையில் நியாயவிலைக் கடையிலேயே பொருள்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, முற்றுகையை விலக்கிக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com