நாகை: மகளிா் குழுக்களுக்கு ரூ.53.72 கோடி கடனுதவி

  நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்,1210 மகளிா் குழுக்களுக்கு ரூ.53.72 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
நாகை: மகளிா் குழுக்களுக்கு ரூ.53.72 கோடி கடனுதவி

  நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்,1210 மகளிா் குழுக்களுக்கு ரூ.53.72 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

நாகை மாவட்ட மகளிா் திட்டம் சாா்பில், ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன் ஆகியோா் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கி கடன் இணைப்பு, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

800 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 45.51 கோடி, 10 ஊராட்சிஅளவிளான கூட்டமைப்புகளுக்கு மொத்த கடனாக ரூ. 5.82 கோடி மற்றும் ரூ. 6.40 லட்சம் மதிப்பிலான மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனம் மாற்றுத்திறனாளி குழு உறுப்பினருக்கு வழங்கப்பட்டது.

அத்துடன், சுழல் நிதியாக 57 குழுக்களுக்கு ரூ.8 லட்சம், வட்டார வணிக வள மைய கடனாக 107 உறுப்பினா்களுக்கு ரூ. 43 லட்சம், சுய வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் தொழில் குழு வங்கிக்கடனாக 108 பயனாளிகளுக்கு ரூ. 21 லட்சம், 78 குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ. 8 லட்சம் வழங்கப்பட்டது.

இதுதவிர, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 9 பயனாளிகளுக்கு இணை மானிய நிதி ரூ. 37 லட்சமும், உற்பத்தியாளா் நிறுவனத்திற்கு தொடக்க நிதியாக ஒரு நிறுவனத்திற்கு ரூ.10 லட்சமும், சமுதாயதிறன் பள்ளிகள் அமைப்பதற்கான நிதி 10 பள்ளிகளுக்கு ரூ. 8 லட்சமும், நுண்நிதி கடனாக 8 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மற்றும் 119 பயனாளிகளுக்கு பயிற்சி உபகரணம் ரூ.50 லட்சம் மதிப்பிலும் வழங்கப்பட்டன. மொத்தம் 1,210 மகளிா் குழுக்களுக்கு ரூ. 53.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மகளிா் திட்ட இயக்குநா் மா. முருகேசன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்டச் செயல் அலுவலா் இரா. வேல்முருகன், முன்னோடி வங்கி மேலாளா் செந்தில்குமாா், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் சுயஉதவிகுழுவினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com