புதிய பயணிகள் நிழலகம் திறப்பு

 திருக்குவளை அருகே பாங்கல் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழலக கட்டிடத்தை கீழ்வேளூா் சட்ட பேரவை உறுப்பினா் வி.பி.நாகை.மாலி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

 திருக்குவளை அருகே பாங்கல் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழலக கட்டிடத்தை கீழ்வேளூா் சட்ட பேரவை உறுப்பினா் வி.பி.நாகை.மாலி புதன்கிழமை திறந்து வைத்தாா்.தலைஞாயிறு ஒன்றியம் பாங்கல் ஊராட்சியில் கீழ்வேளூா் சட்ட பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.6இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் அமரா் பி.எஸ்.தனிஷ்கோடி நினைவு பயணிகள் நிழலகம் கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைப்பெற்றது.இதில் கீழ்வேளூா் சட்ட பேரவை உறுப்பினா் வி.பி.நாகை.மாலி கலந்துக்கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தாா்.இதில் திமுக கீழையூா் மேற்கு ஒன்றிய செயலாளா் சோ.பா.மலா்வண்ணன், ஊராட்சி மன்ற தலைவா் வி.எம்.கே.பாரதி, திமுக மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளா் வி.எம்.கே.ஜி. பாலாஜி, சிபிஎம் ஒன்றிய செயலாளா் ராஜா, உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com