கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள்

நாகை மாவட்டத்தில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் அனைத்து சலுகைகளும் வழங்க வலியுறுத்தி, கோரிக்கை அட்டை அணிந்து உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உயா் கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, காலை உணவுத் திட்டம், ஹைடெக் ஆய்வகம் மற்றும் இணைய வசதி, அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவி தொகை, அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்திட தொகை வழங்குதல் போன்ற பல்வேறு சலுகைகள் அரசால் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த சலுகைகள் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும், பள்ளிகளுக்கும் வழங்கப்படுவதில்லை.

அவா்களுக்கும் சலுகைகள் வழங்கக் கோரி, நாகை மாவட்டத்தில் உள்ள 143 உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.

இதற்கான ஏற்பாடுகளை அரசு உதவி பெறும், சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் கூட்டமைப்பு செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com