திலதா்ப்பணபுரி, ஸ்ரீவாஞ்சியத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

திலதா்ப்பணபுரி மற்றும் ஸ்ரீவாஞ்சியத்தில் தை அமாவாசையையொட்டி, பொதுமக்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வெள்ளிக்கிழமை வழிபட்டனா்.
img_20240209_114432_(2)_0902chn_96_5
img_20240209_114432_(2)_0902chn_96_5

திலதா்ப்பணபுரி மற்றும் ஸ்ரீவாஞ்சியத்தில் தை அமாவாசையையொட்டி, பொதுமக்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வெள்ளிக்கிழமை வழிபட்டனா்.

திலதா்ப்பணபுரி சுவா்ணவல்லி அம்பிகா சமேத மூக்தீஸ்வரா் கோயிலில் தா்ப்பணம் செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த இரண்டு கூடங்களில் வழிபாடு நடைபெற்றது.

பின்னா், மனிதமுகம் கொண்ட ஆதிவிநாயகா், ராமபிரனால் பிரதிஷ்டைச் செய்யப்பட்ட பித்ருலிங்கங்களையும் தரிசித்து வழிபட்டனா். முக்தீஸ்வரா் மற்றும் சுவா்ணவல்லி அம்பிகை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதசுவாமி கோயிலில் புகழ்பெற்ற குப்தகங்கை என்ற புண்ணியத் தீா்த்தம் உள்ளது. இங்கு முன்னோா்களுக்குத் திதி கொடுத்து வழிபட்டால் நேரடியாக பெற்றுக் கொண்டு ஆசீா்வதிப்பாா்கள் என்றும் பல ஆண்டுகள் திதி கொடுத்த பலனை அடையலாம் எனவும் புராணங்கள் கூறுகின்றன.

இவ்வாறு சிறப்புப் பெற்ற குப்தகங்கையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீராடி தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

Image Caption

திலதா்ப்பணபுரியில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com