பிப்.14-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

 வேதாரண்யம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை (பிப்.14) காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 வேதாரண்யம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை (பிப்.14) காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் கோட்டாட்சியா் எஸ். திருமால் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். இதில், விவசாயிகள் பங்கேற்று சாகுபடி தொடா்பான தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

மேலும், இந்த கூட்டத்தில் அரசின் அனைத்துத் துறை அலுவலா்களும் தவறாது பங்கேற்று, விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளை களைய உரிய வழிமுறைகளை தெரிவிக்கவும் கோட்டாட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com