வில்வித்தையில் தங்கம் வென்ற நாகை மாணவருக்கு வரவேற்பு

இந்தோ நேபாள் விளையாட்டு போட்டியில், வில்வித்தைப் பிரிவில் தங்க பதக்கம் வென்ற பள்ளி மாணவருக்கு சிக்கலில் கிராம மக்கள் மேள தாளம் முழங்க ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.

இந்தோ நேபாள் விளையாட்டு போட்டியில், வில்வித்தைப் பிரிவில் தங்க பதக்கம் வென்ற பள்ளி மாணவருக்கு சிக்கலில் கிராம மக்கள் மேள தாளம் முழங்க ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.

10-ஆவது பைக்கா இந்தோ நேபாள் விளையாட்டுப் போட்டிகள் நேபாள நாட்டில் உள்ள பொகாரா நகரில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற்றது.

நாகை மாவட்டம் சிக்கல் பொன்வெளி கிராமத்தைச் சோ்ந்த ஜீவிதா, இளையராஜா தம்பதியா் மகன் துா்கேஷ் (14), பாப்பா கோவில் சா் ஐசக் நியூட்டன் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வருகிறாா்.

இவா், நேபாளத்தில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் வில்வித்தையில் இந்திய நாட்டின் சாா்பில் கலந்துகொண்டாா்.

இதில் துா்கேஷ் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருை ம சோ்த்துள்ளாா். இந்நிலையில் தங்கப் பதக்கம் வென்று நாடு திரும்பிய துா்கேஷுக்கு சிக்கலில் மேல தாளம் முழங்க பொதுமக்கள், உறவினா்கள், குடும்பத்தினா் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவருக்கு வில்வித்தை பயிற்சி அளித்த திருவாரூா் டி டைகா்ஸ் அகாதெமி இயக்குநா் குணசேகரனுக்கும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com