பிப்.14-இல் மகளிா் தொழில்முனைவோா் முகாம்

நாகை மாவட்ட மகளிா் தொழில் முனைவோருக்கான முகாம் புதன்கிழமை (பிப்.14) நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்ட மகளிா் தொழில் முனைவோருக்கான முகாம் புதன்கிழமை (பிப்.14) நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:

அரசின் முன்னோடி திட்டமான ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டமானது ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும், நிதி சேவை, வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது. நாகை மாவட்டத்தில் இத்திட்டம் 53 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மகளிா் தொழில் முனைவோா்களை அடையாளம் கண்டு தோ்வு செய்யும் முகாம் பிப். 14-ஆம் தேதி நாகை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வட்ட அரங்கில் நடைபெறுகிறது.

இம்முகாம் பற்றிய விவரங்களுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்டச் செயல் அலுவலா் இரா. வேல்முருகன் 8778228732, 04365-290033, செயல் அலுவலா் எஸ். இளநங்கையரசி 755016937 மற்றும் வட்டார அணித் தலைவா் வி. செல்வமணி 9566673516 ஆகிய எண்களில் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எண் 221, இரண்டாம் தளம் என்ற முகவரியில் நேரில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com