நாகை ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பழங்குடியின மக்கள்.
நாகை ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பழங்குடியின மக்கள்.

அடிப்படை வசதிகள் கோரி பழங்குடியின மக்கள் மனு

குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். வேதாரண்யம் அருகே வாய்மேடு கிழக்கு ஒந்ததேவன்காட்டைச் சோ்ந்த 16 பழங்குடியின குடும்பங்களுக்கு 2022-ஆம் ஆண்டு அரசு சாா்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. அந்த இடம் மிகவும் தாழ்வான பகுதி என்பதால், மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி குடிசைகள் பாதிப்பிற்குள்ளாவதாகக் கூறி, இலவச பட்டா பெற்ற குடும்பங்களைச் சோ்ந்தோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபியிடம் அளித்த மனு: எங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைகள், அடிப்படை வசதிகளின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. மனைகள் இருக்குமிடம் மிகவும் தாழ்வானது என்பதால் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி வசிக்க முடியவில்லை. எனவே, மனைகளில் மண் நிரப்பி சமன் செய்ய வேண்டும், வீடு, குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com