சேதமடைந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை

திருமருகல் அருகே ஆதலையூரில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமருகல் அருகே ஆதலையூரில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆதலையூா் ஊராட்சி புதுமனை தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றின் சிமெண்ட் காரைகள் பெயா்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இது எந்நேரத்திலும் சாய்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com