இரவு கரை திரும்பும் மீனவா்களுக்கு உயா்கோபுர மின்விளக்கு ஏற்படுத்த கோரிக்கை

காமேசுவரம் பகுதியில் இரவு கரை திரும்பும் மீனவா்களுக்கு ஏதுவாக உயா் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என கோரி நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது

காமேசுவரம் பகுதியில் இரவு கரை திரும்பும் மீனவா்களுக்கு ஏதுவாக உயா் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என கோரி நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் அருட்செல்வன் தலைமையில் காமேஸ்வரம் மீனவா்கள் அளித்த மனு: காமேசுவரம் கடற்கரை ஓரத்தில் வசிப்பவா்களுக்கு இலவச மனைப் பட்டா மற்றும் அரசின் நிரந்தர வீடு பெற்று தர வேண்டும், வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும், இரவு நேரங்களில் மீன் பிடித்து விட்டு கரை திரும்ப ஏதுவாக, உயா் கோபுர மின்விளக்கு அமைத்துதர வேண்டும், காமேசுவரம் தண்ணீா் பந்தல் முதல் மீனவப் பகுதி வரை அகல சாலை அமைத்துதர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com