பிப்.15-க்குள் உளுந்து பயறுகளுக்கு காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தல்

கீழ்வேளூா் வட்டத்தில் உளுந்து, பயறுகளுக்கு பிப்.15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என கீழ்வேளூா் வேளாண் உதவி இயக்குநா் பெ. தெய்வேந்திரன்

கீழ்வேளூா் வட்டத்தில் உளுந்து, பயறுகளுக்கு பிப்.15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என கீழ்வேளூா் வேளாண் உதவி இயக்குநா் பெ. தெய்வேந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கீழ்வேளூா் வட்டாரத்தில் சம்பா, தாளடி நெற்பயிா் சாகுபடி நிறைவடைந்த வயல்களில் உளுந்து, பயறு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்த பயிா் வகைகள் மழை மற்றும் பூச்சி தாக்குதல் பாதிக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு பாதிக்கும் விவசாயிகளை பாதுகாக்க பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏக்கருக்கு ரூ. 82 பிரீமியமாக செலுத்த வேண்டும். இந்த பிரீமிய தொகையை செலுத்த பிப்.15-ஆம் தேதி கடைசிநாளாகும். எனவே, விண்ணப்பம் மற்றும் முன்மொழிவு படிவம், வங்கிக் கணக்கு புத்தக முதல்பக்க நகல், ஆதாா் அட்டை நகல், சிட்டா அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலம் பிரீமியம் செலுத்தி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com