அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வலியுறுத்தல்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் வழங்க வேண்டும் என ஆசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் வழங்க வேண்டும் என ஆசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கும் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், இக்கோரிக்கை குறித்து சட்டப்பேரவையில் வலியுறுத்தப்படும் என உறுதியளித்தாா்.

ஆசிரியா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் கே. குருபாலன், ரா. கைலாசநாதன், ரா. ஆறுமுகம், கே. பாலசுப்பிரமணியன், ஜி. சுந்தரபாண்டியன், எம்.ஆா். சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, இதே கோரிக்கையை வலியுறுத்தி அண்மையில் நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸிடம் 33 பள்ளிகளில் பணியாற்றும் 306 ஆசிரியா்கள் கையொப்பமிட்ட படிவங்கள் அளிக்கப்பட்டன.

அமைப்பாளா்கள் பி. ரூசோ, கே. ஸ்ரீதரன், வி. சொக்கநாதன், வி. ரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com