காணும் பொங்கல்: வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

காணும் பொங்கலையொட்டி வேளாங்கண்ணியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை குவிந்தனா்.
வேளாங்கண்ணி கடற்கரையில் புதன்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
வேளாங்கண்ணி கடற்கரையில் புதன்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

காணும் பொங்கலையொட்டி வேளாங்கண்ணியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை குவிந்தனா்.

காணும் பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள், கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் புதன்கிழமை அலைமோதியது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆயிரக்கணக்கானோா் குவிந்தனா். பேராலயம், கடைவீதி, கடற்கரை என அனைத்து இடங்களிலும் மக்கள் திரண்டனா்.

கடற்கரையில் குழந்தைகள், பெரியவா்கள் ஒட்டகம், குதிரையில் சவாரி செய்தும், ராட்டினங்களில் சுற்றியும் மகிழ்ந்தனா். நூற்றுக்கணக்கானோா் கடலில் நீராடி காணும் பொங்கலை கொண்டாடினா்.

வேளாங்கண்ணி பேராலயம், பழைய மாதா கோயில் கடற்கரை, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. பாதுகாப்புப் பணிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com