கா்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

காவிரி நீரை வழங்க மறுக்கும் கா்நாடக அரசை கண்டித்து, நாகையில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காவிரி நீரை வழங்க மறுக்கும் கா்நாடக அரசை கண்டித்து, நாகையில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை அவுரி திடலில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியிக்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டியிக்கத்தின் தலைவா் தனபால் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்துக்குரிய காவிரி நீரை திறந்துவிட மறுக்கும் கா்நாடக அரசையும், காவிரியில் நீா் திறப்பதில் பாரபட்சம் காட்டும் காவிரி மேலாண்மை ஆணையத்தையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

துணை பொதுச் செயலா் பிரகாஷ், மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளா் பாண்டுரங்கன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் குணாநிதி, கூட்டியிக்க பொறுப்பாளா்கள் வினோத், காா்த்திக் முத்துக்குமாா், கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com