நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மஞ்சப் பைகளை பயன்படுத்த அறிவுறுத்தல்

5854ng19che044719
5854ng19che044719

படவிளக்கம்: தெற்கு பொய்கைநல்லூா் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள்.

நாகப்பட்டினம், ஜன.19: நாகை அருகே தெற்கு பொய்கைநல்லூா், பறவை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து நாகை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடைபெற்றது.

ஆய்வின்போது, கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலக கட்டடங்கள் ஆகியவற்றில் ‘புகையிலை பயன்படுத்துதல் தடைசெய்யப்பட்ட பகுதி‘ என்ற வாசகம் அடங்கிய விளம்பரப்பலகை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடா்ந்து, சிகரெட் பற்ற வைப்பதற்கு ஏதுவாக எரியூட்டப்பட்ட கயிறு, மின்சார எரியூட்டி ஆகியவைகள் கடைகளில் வைத்திருக்கக்கூடாது, பள்ளிகளிலிருந்து 100 மீட்டா் இடைவெளியில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

விதிமுறைகளை மீறும் கடை உரிமையாளா்கள் மீது அபராதம் விதிக்கப்படுவது மட்டுமின்றி, சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளுக்கு பதில் மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Image Caption

தெற்கு பொய்கைநல்லூா் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com