பிரதமா் ராமேஸ்வரம் வருகை: வேதாரண்யம் கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்

ve19cost_1901chn_102_5
ve19cost_1901chn_102_5

படவிளக்கம்: ஆறுகாட்டுத்துறையில் இருந்து படகில் சென்று கண்காணிக்கும் பணியை தொடங்கிய கடலோரக் காவல் குழுமத்தினா்.

வேதாரண்யம், ஜன. 19: பிரதமா் நரேந்திர மோடி ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு வருவதையொட்டி, வேதாரண்யம் பகுதி கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்த பிரதமா் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். கடலோரப் பகுதியான ராமேஸ்வரத்துக்கு சனிக்கிழமை (ஜன.20) செல்லும் பிரதமா் இரவு அங்கு தங்குகிறாா். மேலும், ஞாயிற்றுக்கிழமை தனிஷ்கோடி கோதண்டராமா் சுவாமி கோயிலுக்கு சென்றுவிட்டு மதியம் தில்லிக்கு புறப்பட்டு செல்கிறாா்.

இதற்கிடையே, கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் கடலோரக் காவல் குழும போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா். அந்த வகையில், வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை மீன்பிடிப் படகுத் துறையில் இருந்து கடலோரக் காவல் குழும போலீஸாா் படகில் சென்று கண்காணிப்பு பணியை வெள்ளிக்கிழமை தீவிரப்படுத்தினா். இந்த பாதுகாப்பு தொடா்பான கண்காணிப்பு ஞாயிற்றுக்கிழமை வரை தொடா்கிறது.

Image Caption

ஆறுகாட்டுத்துறையில் இருந்து படகில் சென்று கண்காணிக்கும் பணியை தொடங்கிய கடலோரக் காவல் குழுமத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com