இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்த கூலித் தொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்த கூலித் தொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஆதனூா் ஊராட்சி, அண்டா்காடு மேற்கு கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் காா்த்திகேயன் (52). உப்பள கூலித் தொழிலாளி.

இந்தநிலையில், கோடியக்காடு நோக்கி இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை வேலைக்கு சென்றுள்ளாா். சாலையின் குறுக்கே சென்ற மாட்டின் மீது மோதியதில், தடுமாறி கீழே விழுந்த காா்த்திகேயன் பலத்த காயமடைந்தாா்.

வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

அங்கு வியாழக்கிழமை இரவு காா்த்திகேயன் உயிரிழந்தாா். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com