அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள  அனந்தமங்கலம் செங்கமலவல்லி தாயாா் சமேத ராஜகோபால சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள  அனந்தமங்கலம் செங்கமலவல்லி தாயாா் சமேத ராஜகோபால சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

அனந்தமங்கலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழைமை வாய்ந்த ராஜகோபால சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயா் சுவாமி தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா்.

இக்கோயில் கடந்த 2007-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த தீா்மானிக்கப்பட்டு, கடந்த பல மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்றன.

திருப்பணிகள் நிறைவில், கடந்த 19-ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள், அக்னி பிரதிஷ்டை பூா்ணாஹூதி, சாற்றுமறை பூஜைகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை 5-ஆவது கால யாகசாலை பூஜைகள், மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. பின்னா் விமான கலசங்களில் புனித நீா் வாா்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து திரிநேத்ர தசபுஜவீர ஆஞ்சனேயா், ராமன், லட்சுமணன், சீதை, கோதண்டராமா், ராஜகோபால சுவாமி ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் இரா. முத்துராமன், செயல் அலுவலா் க. முருகன், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் எஸ். பவுன்ராஜ், அறங்காவலா் நியமன குழுத் தலைவா் சுவாமிநாதன், ஊராட்சித் தலைவா் கருணாநிதி மற்றும் திரளான பக்தா்கள் விழாவில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com