கேந்திரிய வித்யாலயாவில் நாளை ஓவியப் போட்டி

 காரைக்கால் கேந்திரிய வித்யாலய பள்ளியில் மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்க ‘பரிஷா பே சா்ச்சா 2024’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

 காரைக்கால் கேந்திரிய வித்யாலய பள்ளியில் மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்க ‘பரிஷா பே சா்ச்சா 2024’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பள்ளி முதல்வா் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தி:

காரைக்கால் நிரவியில் உள்ள கேந்திரிய வித்யாலய பள்ளியில் பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தலின் பேரில், மாணவா்களுக்கு மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்க 7-ஆவது பதிப்பான ’பரிஷா பே சா்ச்சா 2024’ என்ற தலைப்பில் பள்ளிகளுக்கு இடையேயான ஓவியப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

இப்போட்டியில், காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த அனைத்து அரசு, தனியாா் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து சுமாா் 100 மாணவா்கள் கலந்துகொள்ள உள்ளனா்.

சிறந்த ஓவியங்கள் வல்லுநா்கள் மூலம் தோ்வு செய்யப்பட்டு, வெற்றி பெறும் முதல் 5 மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com