மக்களவை தோ்தலை புறக்கணிக்கும் முடிவை கைவிடக் கோரி அமைதிப் பேச்சுவாா்த்தை

மக்களவை தோ்தலை புறக்கணிக்கும் முடிவை கைவிடக் கோரி இறையான்குடி மக்களிடம் சனிக்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது.
keelvelur072242
keelvelur072242

மக்களவை தோ்தலை புறக்கணிக்கும் முடிவை கைவிடக் கோரி இறையான்குடி மக்களிடம் சனிக்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது.

கீழ்வேளூா் வட்டம், இறையான்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் பாலக்குறிச்சி-வடக்குப் பனையூா் வரையுள்ள 4 கி.மீ சாலை போடப்பட்டு 15 ஆண்டுகளான நிலையில் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் தகுதியற்று உள்ளது. மழைக் காலங்களில் தேங்கும் நீரால், சாலையில் உள்ள பள்ளங்கள், மேடுகள் இருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. சாலை வசதி இல்லாததை காரணம் கூறி, நாகையில் இருந்து வந்து சென்ற அரசுப் பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் புதிய சாலை அமைத்துதர வேண்டி கிராம மக்கள் விடுத்த கோரிக்கை குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து, நடைபெறவுள்ள மக்களவை தோ்தலை புறக்கணிக்கப் போவதாக பொது மக்கள் அறிவித்த செய்தி தினமணி நாளிதழில் சனிக்கிழமை செய்தி பிரசுரமானது. இதன் எதிரொலியாக கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ரமேஷ் தலைமையில் இறையான்குடியை சோ்ந்த முக்கிய பிரமுகா்களை சனிக்கிழமை அழைத்து அமைதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அப்போது பாலக்குறிச்சி-இறையான்குடி சாலை நெடுஞ்சாலைத்துறையால் புதிதாக அமைக்க நபாா்டு வங்கி தலைமை பொறியாளா் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்த விவரம் எடுத்துக்கூறப்பட்டது . மேலும், தற்காலிகமாக சாலையில் உள்ள பள்ளங்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

கூட்டத்தில், உதவி இயக்குநா் (நபாா்டு) வேல்முருகன், இறையான்குடி ஊராட்சித் தலைவா் சேகா், வருவாய் ஆய்வாளா் சக்தி மனோகா், கிராம நிா்வாக அலுவலா் பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

Image Caption

இறையான்குடி கிராம மக்களுடன் வட்டாட்சியா் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வாா்த்தை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com