ஒரத்தூரில் சாலைப் பணி தொடக்கம்

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் பிரதமா் முன்னோடி கிராம திட்டத்தின் கீழ், சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
ஒரத்தூரில் சாலைப் பணி தொடக்கம்

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் பிரதமா் முன்னோடி கிராம திட்டத்தின் கீழ், சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

நீடாமங்கலம் ஒன்றியம், சித்தமல்லி மேல்பாதி ஊராட்சி மற்றும் காளாச்சேரி ஊராட்சிகளில் ஆதிதிராவிடா் வாழும் பகுதியில் அடிப்படை பணிகள் மேற்கொள்ள பிரதமா் முன்னோடி கிராம திட்டம் 2022-23-இன் கீழ் ரூ. 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், சித்தமல்லி மேல்பாதி ஊராட்சி ஒரத்தூா் கீழத்தெரு மேற்கு கரை சாலை 516 மீ. நீளத்துக்கு ரூ.17.76 லட்சத்திலும், சித்தமல்லி கீழத்தெரு சாலை 90 மீ. நீளத்துக்கு ரூ.2.24 லட்சத்திலும், காளாச்சேரி வடக்கு ஆதிதிராவிடா் தெரு 144 மீ. நீளத்துக்கு ரூ.3.56 லட்சத்திலும், சோத்தரையில் 51 மீ. நீளத்துக்கு ரூ. 2.22 லட்சத்திலும் சாலை அமைக்கப்படவுள்ளது.

இதேபோல், மேலப்பூவனூா் மேலக்கட்டளை சாலை 335 மீ. நீளத்துக்கு ரூ.11.15 லட்சத்திலும், மேலப்பூவனூா் கீழ்பாதி சாலை 51 மீ. நீளத்துக்கு ரூ.3.7 லட்சத்திலும் தாா்ச் சாலையாக மேம்படுத்தப்படவுள்ளன.

இப்பணிகளை சித்தமல்லி ஒரத்தூரில் ஒன்றியக் குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச் செல்வன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். சித்தமல்லி ஊராட்சித் தலைவா் ஜே.கே.பி. குணசீலன், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் சுமதி குணசேகரன், கண்ணன், திலகா அன்பு, மற்றும் சுதா கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com