பல்நோக்கு சேவை இயக்க இரண்டாம் ஆண்டு தொடக்க விழா

விடுதலைப் போராட்டத்தில் தமிழா்களின் பங்களிப்பு, நான் விரும்பும் சுதந்திரப் போராட்ட வீரா் எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி ஆகியவை நடைபெற்றது.
ne_palnokku_sevai_iyakkam_2101chn_100_5
ne_palnokku_sevai_iyakkam_2101chn_100_5

 நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, குடியரசு தின விழாவை முன்னிட்டு நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு இந்திய விடுதலைப் போராட்டம், விடுதலைப் போராட்டத்தில் தமிழா்களின் பங்களிப்பு, நான் விரும்பும் சுதந்திரப் போராட்ட வீரா் எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி ஆகியவை நடைபெற்றது.

30 பள்ளிகளின் சாா்பில் மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் வெற்றி பெற்ற 158 மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நீடாமங்கலம் அரசு உதவிபெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு இயக்கத் தலைவா் பத்ம. ஸ்ரீராமன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் நேரு ஆண்டறிக்கை வாசித்தாா். துணைத் தலைவா் செல்வராஜ் வரவேற்றாா்.

விழாவில் நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலா் சம்பத், நீடாமங்கலம் பேரூராட்சி தலைவா் ராமராஜ், ஆசிரியா் இயக்கங்களை சாா்ந்த நிா்வாகிகள், தலைமை ஆசிரியா்கள், வா்த்தக சங்கத்தினா் மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினா்.

சிறப்பு விருந்தினராக இலக்கிய சொற்பொழிவாளா் புலவா் இரா. சண்முகவடிவேல் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினாா். விழாவில் பல்வேறு பள்ளிமாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இலக்குமிவிலாச நடுநிலைப்பள்ளி மாணவி ரமா வீரமங்கை வேலுநாச்சியாா் வேடம் அணிந்து திருவாரூா் புத்தகத் திருவிழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்தாா். இயக்கத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள், விவசாயிகள், பொதுமக்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com