தை கிருத்திகை வழிபாடு

Tai Krittikai worship நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோயிலில் தை கிருத்திகை வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
தை கிருத்திகை வழிபாடு

 நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோயிலில் தை கிருத்திகை வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் தை கிருத்திகையையொட்டி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அனைத்து கோயில்களிலும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com