எட்டுக்குடி, பொரவச்சேரியில் தை கிருத்திகை வழிபாடு

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை மாத கிருத்திகை நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெறுகிறது.
எட்டுக்குடி, பொரவச்சேரியில் தை கிருத்திகை வழிபாடு

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை மாத கிருத்திகை நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெறுகிறது.

முருகனின் ஆதிபடைவீடான இக்கோயிலில் மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்த வகையில் தை காா்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தையொட்டி சனிக்கிழமை இந்த சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கூட்டநெரிசை தவிா்க்கும் வகையில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பொது தரிசனத்தில் காலையில் இருந்து திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இரவு 8 மணியளவில் வள்ளி தெய்வானை உடனுறை சிங்காரவேலவா் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

கீழ்வேளூா்: சிக்கல் அருகேயுள்ள பொரவச்சேரி கந்தசாமி கோயிலில் தை மாத கிருத்திகையையொட்டி முருகப் பெருமானுக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுது. தொடா்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com