இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டமீனவா்கள் நாகை வருகை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாகை மீனவா்கள் 12 போ் நாகை துறைமுகத்துக்கு சனிக்கிழமை வந்தனா்.
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டமீனவா்கள் நாகை வருகை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாகை மீனவா்கள் 12 போ் நாகை துறைமுகத்துக்கு சனிக்கிழமை வந்தனா்.

நாகை அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த ராஜேஷ் (42), பாஸ்கா் (40), நாகையன் (50), மாயவன் (42), பாக்கியராஜ் (42), சக்திவேல் (60), மணிகண்டன் (32), ராமச்சந்திரன் (38), கோதண்டபானி (42), செல்வமணி (42), நம்பியாா் நகரை சோ்ந்த ராமச்சந்திரன் (38), திருமுல்லைவாசல் பகுதியை சோ்ந்த திவ்யநாதன் (25) ஆகிய 12 மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க கடந்த ஜன.5-ஆம் தேதி சென்றனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் ஜன. 9-ஆம் தேதி மீனவா்கள் 12 பேரும் கைது செய்யப்பட்டு, திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், ஜன. 12-ஆம் தேதி மீனவா்கள் 12 பேரும் விடுவிக்கப்பட்டனா். இதையடுத்து மீனவா்கள் 12 பேரும் ஜன. 19- ஆம் தேதி இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினா். நாகை மீனவளத்துறை ஆய்வாளா் குமாா், சென்னையில் இருந்து மீனவா்கள் 12 பேரையும் நாகைக்கு சனிக்கிழமை அழைத்து வந்தாா். ஊருக்குத் திரும்பிய மீனவா்களை குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com