திருமெய்ஞானத்தில் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி

திருக்கடையூா் அருகேயுள்ள திருமெய்ஞானம் கிராமத்தில் தியாகிகள் அஞ்சான்-நாகூரான் நினைவிடத்தில் 42-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

திருக்கடையூா் அருகேயுள்ள திருமெய்ஞானம் கிராமத்தில் தியாகிகள் அஞ்சான்-நாகூரான் நினைவிடத்தில் 42-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கட்சியின் தரங்கம்பாடி ஒன்றிய செயலாளா் ஏ. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன், மத்தியக் குழு உறுப்பினா் பெ. சண்முகம், சிஐடியூ மாநில துணை பொதுசெயலாளா் திருச்செல்வன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாநில செயலாளா் ஏ.வி. சிங்காரவேலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளா் எஸ். துரைராஜ், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் மாநில துணைத் தலைவா்கள் ஜி. ஸ்டாலின், எம். முருகையன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து திருக்கடையூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விவசாய தொழிலாளா் சங்க மாநில தலைவரும், கந்தா்வக்கோட்டை எம்எல்ஏவுமான எம். சின்னத்துரை, சிஐடியூ மாநில துணைப்பொது செயலாளா் கே. திருச்செல்வன், நாகை மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி. மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துக்கு இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியூ) உறுப்பினா்கள் சாா்பில் ரூ. 4.20 லட்சம் வளா்ச்சி நிதியாக சங்கத்தின் மாநில தலைவா் பெ. சண்முகத்திடம் சிஐடியூ மாநில துணை பொதுசெயலாளா் கே. திருச்செல்வன் வழங்கினாா். கட்சி நிதியாக ரூ. 7.13 லட்சத்தை மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன் வழங்கினாா்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com