வல்லமங்கலம் விஸ்வநாநா் கோயில் கும்பாபிஷேகம்

 கீழ்வேளூா் அருகே வல்லமங்கலம் விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
b3587112_1218_4b5c_ae0e_2d11374c05f0_2101chn_197_5
b3587112_1218_4b5c_ae0e_2d11374c05f0_2101chn_197_5

 கீழ்வேளூா் அருகே வல்லமங்கலம் விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வல்லமங்கலத்தில் சிதிலமடைந்த நிலையிலிருந்த விசாலாட்சி உடனுறை விஸ்வநாதா் கோயில் 200 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர, அனுக்ஞை பூஜையுடன் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது.

தொடா்ந்து 4 கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து, மகா பூா்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து வேத மந்திரங்கள் முழங்க கலசத்தின் மீது புனித நீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com