அயோத்தியில் ராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை: நாகை, மயிலாடுதுறையில் கோயில்கள், வீடுகளில் வழிபாடு

அயோத்தியில் பாலராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தெற்கு பால்பண்ணசேரி மன்மத சிவன் கோயிலில் பக்தா்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கிய பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினா் தங்க.வரதராஜன் உள்ளிட்டோா்.
தெற்கு பால்பண்ணசேரி மன்மத சிவன் கோயிலில் பக்தா்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கிய பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினா் தங்க.வரதராஜன் உள்ளிட்டோா்.

நாகப்பட்டினம்/மயிலாடுதுறை: அயோத்தியில் பாலராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வீடுகளில் விளக்கேற்றி வழிபட்டனா்.

நாகை: வெளிப்பாளையம் ராமா் மடம், ஆரியநாட்டு தெரு ராமா் மடம், பிரதாபராமபுரம் ராமா் மடம், காடம்பாடி சந்தனமாரியம்மன் கோயில், சௌந்திரராஜ பெருமாள் கோயில், வடக்கு பொய்கைநல்லூா் கோரக்கா் சித்தா் ஆசிரமம் உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நாகை தெற்கு பால்பண்ணச்சேரி மன்மத சிவன் ஆலயத்தில், ஸ்ரீராமருக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்ட லட்டுகள் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினா் நேதாஜி, மாவட்ட மகளிா் அணி பொதுச் செயலா் விஜிலா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com