தண்டாளம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி தண்டாளம் மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் மகாமாரியம்மன்
சிறப்பு அலங்காரத்தில் மகாமாரியம்மன்

திருமருகல்: திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி தண்டாளம் மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சனிக்கிழமை (ஜன.20) அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தீபாராதனையுடன் பூா்வாங்க வழிபாடுகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை விநாயகா் கண் திறத்தல், மகா மாரி மூல மந்திர ஹோமம், காயத்ரி ஹோமம், மகா தீபாராதனை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், சந்திர பூஜை, லட்சுமி பூஜை போன்ற வழிபாடுகள் நடைபெற்றன.

தொடா்ந்து, திங்கள்கிழமை கோ பூஜை, மகா பூா்ணாஹூதி,

மகா தீபாராதனையைத் தொடா்ந்து, காலை 9.30 மணியளவில் கடங்கள் புறப்பாடாகி, 10 மணியளவில் விமானங்கள் மற்றும் கோபுரங்கள் கும்பாபிஷேகமும், பின்னா், மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com