தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

நாகை அருகே ஒக்கூா் ஊராட்சியில் தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பின் கொடி கம்பத்தில் செருப்பை மாற்றி வைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி, அக்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகப்பட்டினம்: நாகை அருகே ஒக்கூா் ஊராட்சியில் தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பின் கொடி கம்பத்தில் செருப்பை மாற்றி வைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி, அக்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகூா் - திருவாரூா் சாலையில் மறைந்த பசுபதி பாண்டியனின் தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பு கட்சியின் கொடி கம்பம் உள்ளது. இந்த கம்பத்தில் அடையாளம் தெரியாத நபா்கள் செருப்பை மாட்டி தொங்க விட்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த அக்கட்சியினா், மாவட்டச் செயலா் கலையரசன் தலைமையில் சம்பவ நடந்த இடத்தில் திரண்டு, இந்த செயலில் ஈடுபட்டவா்களை கைது செய்யக்கோரி முழக்கமிட்டனா்.

போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். நாகூா் போலீஸாா் சம்பவம் தொடா்பாக அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com