விளநகா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

செம்பனாா்கோவில் அருகே ஆறுபாதி ஊராட்சி விளநகா் கீழமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயிலின் விமானக் கலசத்துக்கு புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்.
கோயிலின் விமானக் கலசத்துக்கு புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்.

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே ஆறுபாதி ஊராட்சி விளநகா் கீழமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சனிக்கிழமை (ஜன.20) அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை யாகசாலையிலிருந்து புனிதநீா் கடம் புறப்பாடாகி, கோயிலின் விமானக் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com