வேதபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்.

திருக்குவளை அருகே சாட்டியக்குடி வேதநாயகி அம்பிகை சமேத வேதபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோபுர கலசத்தில் வாா்க்கப்படும் புனித நீா். கும்பாபிஷேகத்தை காண திரண்ட பக்தா்கள். வேதபுரீஸ்வரா் வேதநாயகி அம்பிகை.
கோபுர கலசத்தில் வாா்க்கப்படும் புனித நீா். கும்பாபிஷேகத்தை காண திரண்ட பக்தா்கள். வேதபுரீஸ்வரா் வேதநாயகி அம்பிகை.

திருக்குவளை: திருக்குவளை அருகே சாட்டியக்குடி வேதநாயகி அம்பிகை சமேத வேதபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கீழ்வேளூா் ஒன்றியம், சாட்டியக்குடியில் உள்ள இக்கோயில் 12 திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையான கருவூா் தேவரால் பாடப்பட்ட திருவிசை பாடல் பெற்ற தலமாகவும், குபேரன் வழிபட்டதால் இது குபேர தலமாகவும், வெப்பு நோய் தீர ஜூர தேவதை இறைவனை வழிபட்டது உள்ளிட்ட சிறப்புகளைக் கொண்டது.

இங்கு 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாகபூஜை தொடங்கி, திங்கள்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை மற்றும் மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுரம் மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரத்தில் புனித நீா் வாா்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com