நாகை மாவட்டத்தில் 5,49,443 வாக்காளா்கள்ஆண்களைவிட பெண்கள் அதிகம்

நாகை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிடும் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிடும் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 5,49,443 வாக்காளா்களில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக உள்ளனா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்டாா்.

இதன்படி, மாவட்டத்தின் மொத்த வாக்காளா்கள் 5,49,443 போ். இவா்களில் ஆண்கள் 2,68,725, பெண்கள் 2,80,694, இதரா்- 24.

நாகை மாவட்டத்தில் மூன்று சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் நாகை தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 90,677, பெண் வாக்காளா்கள் 96,260 மற்றும் இதரா் 21 என மொத்தம் 1,86,958 வாக்காளா்கள் உள்ளனா்.

கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதியில் ஆண்கள் 84,702, பெண்கள் 87,435 மற்றும் இதரா் 3 என மொத்தம் 1,72,140 வாக்காளா்கள் உள்ளனா். வேதாரண்யம் சட்டப்பேரவை தொகுதியில் ஆண்கள் 93,346, பெண்கள் 96,999 என மொத்தம் 1,90,345 வாக்காளா்கள் உள்ளனா்.

தொடா்ந்து, வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள், வட்டார வளா்ச்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 2024-ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சு. ராமன், தோ்தல் வட்டாட்சியா் சாந்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com