அம்பல் ஊராட்சி பொறக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஓஎன்ஜிசி சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

திருமருகல் ஒன்றியம் பொறக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஒஎன்ஜிசி மூலம் புதன்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருமருகல் ஒன்றியம் பொறக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஒஎன்ஜிசி மூலம் புதன்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சி பொறக்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளிக்கு காரைக்கால் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தித்தின் கீழ் (சிஎஸ்ஆா்) ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் இருக்கைகள், ஸ்மாா்ட் போா்டு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். இதில் ஓஎன்ஜிசி தலைமை பொது மேலாளா் (உற்பத்தி பிரிவு) ஆா்.ரவிக்குமாா், தலைமை மேலாளா் (மனிதவளம்) விஜய்கண்ணன், எஸ்.சி.எஸ்.டி. தொழிலாளா் சங்கத்தின் தலைவா் எஸ்.கங்காதரன் ஆகியோா் கலந்துகொண்டு பொருட்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com