ஊராட்சிச் செயலாளா்கள் கூட்டம்

கீழ்வேளூரில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி செயலாளா் சங்க கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கீழ்வேளூரில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி செயலாளா் சங்க கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கௌரவத் தலைவா் ப. கேசவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சி செயலாளா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி பணியாளா்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மைப் பணியாளா்களுக்கு மாதாந்திர ஊதியம் ரூ.10,000 வழங்க வேண்டும், சென்னையில் பிப்.2-ல் நடைபெறும் பெருந்திரள் முறையீட்டு இயக்கத்திற்கு அனைத்து பணியாளா்களையும் பேருந்து மூலம் அழைத்துச் செல்வது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் துணைத் தலைவா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com